காற்று மாசு விழிப்புணர்வு மனிதச் சங்கிலி

Published Date: February 7, 2023

CATEGORY: CONSTITUENCY

மதுரை மாநகராட்சி சார்பில், காற்று மாசு தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி திங்கள்கிழமை நடைபெற்றது.

தமுக்கம் மைதானம், தமிழன்னை சிலை அருகில் தொடங்கிய மனிதச் சங்கிலியை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடக்கி வைத்தார். இதில் மாநகராட்சி மேயர் வ.இந்திராணி, ஆணையர் சிம்ரன் ஜீத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த மனித சங்கிலியில் இளங்கோ மாநகராட்சி பள்ளியைச் சேர்ந்த 250 மாணவர்கள் கலந்து கொண்டனர். காற்று மாசு தவிர்த்தல் குறித்து விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் உதவி ஆட்சியர் (பயிற்சி) திவான்சு நிகம், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் உஷா, மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகா, மதுரை மாவட்ட கல்வி அலுவலர் முரளி, மண்டலத்தலைவர் சரவண புவனேஸ்வரி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், பள்ளி மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Media: Dinamani